fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தூத்துக்குடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடை பெற்றுவரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் செய்தியாளர் களுடன் சென்று பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் வடக்குகல்மேடு கிராமம் அருகில் உள்ள கல்லாறு ஆற்றின் குறுக்கே கட்டப் பட்டுள்ள கட்டபொம்மன் அணைக்கட்டின் நிரந்தர சீரமைப்பு பணிகளையும், கக்கரம்பட்டி ஊராட் சியில் ரூ.18.42 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன் வாடி மையம், கக்கரம்பட்டி ஊராட்சி குறுக்குச்சாலை பகுதியில் ரூ.18.42 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட் டப்பட்டு வரும் 30000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி கச்சேரி தளவாய்புரம் ஊராட் சியில் ரூ.126.57 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தின் கட்டுமானப் பணிகளையும், கச்சேரி தளவாய்புரம் ஊராட்சியில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 60000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியினையும், கச்சேரி தளவாய்புரம், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வை யிட்டார். தொடர்ந்து, ஓட்டப்பிடாரம் வட்டம், எப்போதும்வென்றான் அணைக்கட்டு, எப்போதும் வென்றான் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியர் களுக்கு வழங்கப்படும் சத்துணவினை பார்வை யிட்டு பள்ளி மாணவ மாணவியர்களின் வாசிப்பு திறனை அறிந்திட செய் தித்தாள்களை கொடுத்து மாணவ, மாணவியர்கள் பிழையின்றி படித்திட மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, பி.துரைசாமிபுரம் ஊராட்சி பகுதியில் ரூ.9.77 லட்சம் மதிப்பீட்டில் கட் டப்பட்டு வரும் நியாய விலைக்கடை கட்டடம். ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நூலக கட்டிடத்தினையும் பார்வையிட்டார்.
மேலும், கீழமுடிமண் ஊராட்சியில் ரூ.16.55 லட்சம் மற்றும் ரூ.17.55 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் இரண்டு அங்கன்வாடி கட்டிடங்களையும், ஓட் டப்பிடாரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் வரு வாய் வட்டாட்சியர் அலுவலகத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களுடன் சென்று பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, செயற்பொறியாளர் வசந்தி, வட்டாட்சியர் ஆனந்த் மற்றும் அரசு அலுவலர்கள், செய்தியா ளர்கள் ஆகியோர் உட னிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img