fbpx
Homeபிற செய்திகள்ராணிப்பேட்டையில் மாவட்ட ஆட்சியர் சுயதொழில் பயனாளிகளை சந்தித்து ஆய்வு

ராணிப்பேட்டையில் மாவட்ட ஆட்சியர் சுயதொழில் பயனாளிகளை சந்தித்து ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் வங்கிக்கடனுதவியுடன் அரசு மானியம் பெற்று சுயதொழில் செய்து வரும் பயனாளிகளை “நிறைந்தது மனம்“ என்ற திட்டத்தின் வாயிலாக மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா செய்தியாளர்களுடன் சென்று பயனாளிகளின் தொழில் முன்னேற்றம் பயன் குறித்து செய்தியாளர்களுக்கு விவரித்தார்கள்.

இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த அம்சவேணி பாலசுப்பிரமணியன் என்கிற பயனாளி கூறியதாவது:
நான் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு தாலுகாவில் வசித்து வருகின்றேன். நான் கரும்பு விவசாயி, 5 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டு வந்தேன். கரும்பு அறுவடைக்கு ஆட்கள் பற்றாக்குறை மற்றும் அதிகளவிலான கூலி தேவைப்படுவதால் அவதிப்பட்டு வந்தோம்.

இந்நிலையில் ராணிப் பேட்டை மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ், ரூ.132.52 லட்சம் திட்ட மதிப் பீட்டில் கரும்பு அறுவடை இயந்திரம் வாங்கி வாடகைக்கு விட விண்ணப்பம் செய்து, இந்தியன் வங்கி, கலவை வங்கிக்கு பரிந்துரைக்கப்பட்டு வங்கிக் கடன் வழங்கப்பட்டது.

இத்திட்டத்தில் அரசு மானியமாக 35 சதவீதம் ரூ.46.38 லட்சம் கிடைக்கப் பெற்றது. தற்பொழுது, இத்தொழிலை வெற்றிகரமாக நடத்தி கொண்டு வருகிறேன். கரும்பு 1 டன் அறுவடைக்கு அரசு நிர்ணயித்த விலை ரூ.630/- விவசாயிகளிடமிருந்து வாடகையாக பெற்று வருகின்றேன். முதல்வருக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

அதேபோல ஆற்காடு நகராட்சி வேலூர் சென் னை பைபாஸ் சாலை அருகே பொறியியல் பட்டதாரியான ஸ்ரீ ராஜ், தமிழ்நாடு அரசின் நீட்ஸ் திட்டத்தின் மூலம் மாவட்ட தொழில் மையத்தில் இருந்து கார் சர்வீஸ் சென்டர் ஆரம் பிக்க ரூ.32.52 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவி பெற்று, அதில் 25 சதவீதம் அரசு மானியம் ரூ.8.13 லட்சம் பெற்று கார் சர்வீஸ் சென்டர் தொழில் தொழில் செய்து வருவதை விவரித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்கள் சந்திப் பில் கூறியதாவது: அரசின் திட்டங்களை பெற்று பயனடைந்து வரும் பயனாளிகளின் தொழிலின் மூலம் அடைந்து வரும் வெற்றி கருத்துக்களை அறிந்து, மற்றவர்களும் இத்திட்டங்களில் பயனடையும் வண்ணம், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிறைந்தது மனம் என்ற புதிய திட்டத்தின் மூலமாக பயனாளிகளை நேரடியாக சென்று கேட் டறிகின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img