fbpx
Homeபிற செய்திகள்உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி வழிகாட்டுதலின் படி, கோவை மாநகர் மாவட்டம் திமுக இளைஞரணி மணியகாரன்பாளையம் பகுதி திமுக இணைந்து கோவை காந்திமாநகர் மைதானத்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடத்தியது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் பரிசளித்து வாழ்த்தினார்.

மணியகாரன்பாளையம் பகுதி செயலாளர் அஞ்சுகம் பழனியப்பன் தலைமையில் மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தனபால் வரவேற்புரையில், இளைஞரணி துணை அமைப்பாளர் க.மணிகண்டன் ஏற்பாட்டில், மாநகர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் திருமலைராஜா, துரை.பிரவீண் குமார், கோவை அருண், லாரா பிரேம்தேவ், சி.எம்.எஸ்.மசூது முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வட்டக்கழக செயலாளர்கள் 19 வது வார்டு பி.குமார், 20 வது வார்டு ஆர்.புகழேந்தி, 25 வது வார்டு ஆர்.தாமோதரன், மாமன்ற உறுப்பினர்கள் 25 வது வார்டு தவமணி பழனியப்பன், 20வது வார்டு மரியராஜ், மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஆர்.கே.சுரேஷ்குமார், பொறியாளர் அணி அமைப்பாளர் நா.பாபு, வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரமேஷ் உள்ளிட்ட கழக நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img