fbpx
Homeபிற செய்திகள்ஈரோட்டில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செய்தியாளர்களுடன் ஆய்வு

ஈரோட்டில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செய்தியாளர்களுடன் ஆய்வு

ஈரோடு மாவட்டம், புஞ்செய்புளியம்பட்டி, சத்தியமங்கலம், பவானிசாகர் ஆகிய பகு திகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணி களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் வெங்கடேஷ் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா முன்னிலையில் செய்தியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இவர்கள் புஞ்செய்புளியம்பட்டி நகராட்சி வார்டு எண் 18, ராமநாதபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி பணியினை பார்வையிட்டனர்.
தொடர்ந்து, நேரு நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், எண்ணும் எழுத்தும் திட் டத்தினை ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1.05 கி.மீ நீளத்திற்கு ரூ.32.02 லட்சம் மதிப்பீட்டில் அரியப்பம்பாளையம் – தபோவனம் செல்லும் சாலை வலுப்படுத்தும் பணிகளையும், பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம், விண்ணப்பள்ளி ஊராட்சி பாரதி நகர் பகுதியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.111.60 லட்சம் மதிப்பீட்டில் 36 வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், பவானிசாகர் அணை நீரேற்று நிலையம், புஞ்செய்புளியம்பட்டி நகராட்சியில், அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.52.07 கோடி மதிப்பீட்டில் நடை பெற்று வரும் குடிநீர் திட்ட அபிவிருத்தி பணிகளையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் நஞ்சப்பகவுண்டன்புதூர் காலனி, கோணமூலை பகுதியில் ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டத்தின் கீழ் ரூ.55,000 மதிப் பீட்டில் நடைபெற்று வரும் வீடு சீரமைக்கும் பணியினையும், அதே பகு தியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.30.10 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி அலுவலகம் கட் டப்பட்டு வருவதையும், சத்தியமங்கலம் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.303 லட்சம் மதிப்பீட்டில் 40 கடைகள் மற்றும் 130 திறந்த வெளி கடைகளுடன் வாரச் சந்தை மேம்படுத்தும் பணி யினையும் நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்த ஆய்வுகளின் போது, கூடுதல் ஆட்சியர் சதீஸ், உதவி ஆட்சியர் ராமகிருஷ்ணசாமி, முதன்மை கல்வி அலு வலர் சுப்பாராவ், புஞ்செய்புளியம்பட்டி மற்றும் சத்தியமங்கலம் நகராட்சி ஆணையர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img