தீபாவளியை முன்னிட்டு, கோவையைச் சேர்ந்த டாக்டர் ராஜன் மற்றும் டாக்டர் வித்யா ராஜன் ஆகியோர் தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ELCE குழுவினருடன் 174 ஏழை குழந்தைகளுக்கு புதிய ஆடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கி தீபாவளியைக் கொண்டாடினர்.
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ட்ரீம் ஸ்பெஷல் ஸ்கூலில் படிக்கும் 127 குழந்தைகளுக்கும் டான் போஸ்கோ அன்பு இல்லம் மற்றும் கோவைப்புதூரில் உள்ள பாரத் சியோன் அறக்கட்டளை பராமரிக்கும் பெற்றோரை இழந்த 47 பேருக்கும் புத்தாடைகள், இனிப்பு வழங்கப்பட்டது.
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ட்ரீம் ஸ்பெஷல் ஸ்கூல் நிறுவனர் டாக்டர் ஜெயபிரபா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த மையம் முற்றிலும் உடல் மற்றும் மனநலம் பாதிக் கப்பட்ட சிறப்பு குழந்தைகளுக்காக ஊனமுற்ற பெண்களால் நடத்தப்படுகிறது.
சமீபத்தில் இந்த மையத்திற்கு டாக்டர் வித்யா மூலம் Inbloomz இன் இயக்குனர் அனிதா வடிவேல், கழிப்பறையை சுத்தம் செய்வதற்கு வசதியாக கம்ப்ரஸர் வழங் கியது குறிப்பிடத்தக்கது.