fbpx
Homeபிற செய்திகள்உதகை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா

உதகை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா

தீபாவளி 2024 சிறப்பு விற்பனைக்காக கைத்தறி ரகங்களுக்கு கோ-ஆப்டெக்ஸின் அனைத்து விற்பனை நிலையங்களிலும் 15.09.2024 முதல் 30% அரசு சிறப்புத் தள்ளுபடி வழங்குகிறது.

தீபாவளி 2024 சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடக்க விழா கோ-ஆப்டெக்ஸ் உதகை விற்பனை நிலையத்தில் நடந்தது. விற்பனையை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா இன்று தொடங்கி வைத்தார். விழாவில் ஏராளமான வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

தீபாவளி 2024 சிறப்பு விற்பனைக்காக உதகையின் சிறப்பம்சமான தோடா இன மக்களின் கை வண்ணத்தில் உருவாக்கப்பட்ட எம்ப்ராய்டரி சால்வைகள், மஃப்ளர்கள் மற்றும் ஸ்டோல், டேபிள் ரன்னர் ஆகியன விற்பனைக்கு வைக்கப்பட்ருள்ளன. மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெச வாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட புதிய வடிவமைப்புகளுடன் கூடிய போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், பட்டு, பருத்தி சேலைகள், ஆடவர் அணியும் ஆயத்த சட்டைகள், மகளிர் வேட்டிகள், லுங்கிகள், துண்டு ரகங்கள், விரும்பும் சுடிதார் ரகங்கள் ஆர்கானிக் பருத்தி சேலைகள், ஏற்றுமதி தரம் வாய்ந்த ஹோம் பர்னிசிங் ரகங்கள் ஏராளமாக தருவிக்கப்பட் டுள்ளன. உதகை விற்பனை நிலையம் கடந்த ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.55.38 லட்சங்கள் தற் போது தீபாவளி விற்பனை இலக்காக ரூ.75 லட்சங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விழாவில் கோ-ஆப்டெக்ஸின் மண்டல மேலாளர் பு.அம்சவேணி, முதுநிலை மேலாளர் (ரகம் – பகிர்மானம்) கோ.ஜெக நாதன், உதகை விற்பனை நிலைய மேலாளர் எஸ்.சபினா நாஸ் மற்றும் கோ-ஆப் டெக்ஸின் அலு வலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img