மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இத்திட்டத்திற்கான நிதியை கடந்த சில மாதங்களாக விடுவிக்காமல் இருப்பதை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் திமுகவினர் அனைத்து ஒன்றியங்க ளிலும் ஆர்ப்பாட்டம் மேற் கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை பன்னி மடை ஊராட்சிக்கு உட்பட்ட கணுவாய் பேருந்து நிலையம் அருகில் திமுகவினர் 100 நாள் வேலைக்கு செல்பவர்களு டன் போராட்டம் மேற் கொண் டனர். கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன பதாகைகளை ஏந்தி முழக் கங்களை எழுப்பினர்.