fbpx
Homeபிற செய்திகள்மும்மொழி கொள்கையை எதிர்த்து கோவையில் திமுக ஆர்ப்பாட்டம்

மும்மொழி கொள்கையை எதிர்த்து கோவையில் திமுக ஆர்ப்பாட்டம்

மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை திணித்து மீண்டும் மொழிப்போருக்கு நிர்பந்திக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக உள்ளிட்ட மாணவர்கள் இயக்கங்கள் கூட்டமை சார்பில் கோவை சாயிபாபா காலனி, ஒன்றிய பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநகர் மாவட்ட அமைப்பாளர் சிவபிரகாசம் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் மாவட்ட அமைப்பாளர்கள் அந்தோணிராஜ், சூலூர் பிரபு ஆகியோர் வரவேற்றுப் பேசினர். திமுக மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் முன்னிலையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக மாநில மாணவரணி தலைவர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி, மேயர் ரங்கநாயகி,
துணைமேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img