விழுப்புரத்தில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலித்திட வேண்டிய தமிழ்நாட்டின் கருத்துகள் என்ற தலைப்பில், பல்வேறு தரப்பினரின் கருத்துகள் கேட்டு மனுகள் பெறப்பட்டன.
2024 மக்களவை தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
திமுக செய்தித் தொடர்புத்தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக விவசாய அணிச்செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், திமுக சொத்துப் பாதுகாப்புக் குழுச் செயலாளர் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக தகவல் தொழிநுட்ப அணிச் செயலாளர் அமைச்சர் டி.ஆர்.பி.இராஜா, திமுக வர்த்தகர் அணி துணைத்தலைவர் கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ் குமார் எம்.பி., திமுக மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., திமுக அயலக அணிச்செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி., திமுக மருத்துவ அணிச் செயலாளர் மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., சென்னை மாநகர மேயர் பிரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் பிப்ரவரி 5 ஆம் தேதி முதல், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலித்திட வேண்டிய தமிழ்நாட்டின் கருத்துகள் என்ற தலைப்பில், பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டு வருகின்றனர்.
மேலும் எழுத்துப்பூர்வமாக, தொலைபேசி, சமூக ஊடகங்கள் வாயிலாக, ஆன்லைன் மூல மாக, கடிதங்கள் வழியாக கோரிக்கைகளை அனுப்புவதற்கான முகவரிகளும் அளிக்கப்பட்டு, பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளது. பிப்ரவரி 5 ஆம் தேதி மக்களை சந்திக்கும் சுற்றுப்பய ணத்தை தொடங்கிய தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் இன்றுடன் (மார்ச் 2) தங்களது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்கின்றனர்.
அதன்படி விழுப்புரத்தில் அமைந்துள்ள வி.வி.ஏ. திருமண மண்டபத்திலும், பிற்பகல் 3 மணியளவில் தஞ்சாவூரில் அமைந் துள்ள குருதயாள் சர்மா திருமண மண்டபத்திலும் மக்களை நேரில் சந்தித்து பரிந்துரைகளைப் பெறு கின்றனர். வணிகர் சங்கங்கள், விவசாயிகளின் பிரதிநிதிகள், நெசவாளர்கள், மீனவ சங்கங்கள், தொழில் முனைவோர், தொழிற் சங்கங்கள், மாணவர் சங்கங்கள், கல்வியாளர்கள், அரசு ஊழி யர்களின் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள், திமுக நிர்வாகிள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் நேரில் தங்கள் கோரிக்கைகளை அளிக்கவுள்ளனர்.
விழுப்புரத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. சென்னை மாநகர மேயர் பிரியா, திமுக சொத்துப் பாது காப்புக் குழுச் செயலாளர் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோகள் பல்வேறுபட்ட காரணங்களால் வரவில்லை.