fbpx
Homeபிற செய்திகள்டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவமனையில் கண் மருத்துவவியல் கல்வி பயிலரங்கம்

டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவமனையில் கண் மருத்துவவியல் கல்வி பயிலரங்கம்

டாக்டர் அகர்வால்ஸ் குழுமத்தின் ஆராய்ச்சி மற்றும் கல்விப் பிரிவான டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மற்றும் கண் ஆராய்ச்சி மையம்
ஒவ்வொரு ஆண்டும் கண் மருத்துவவியல் முதுகலை மாணவர்களுக்காக கல்ப விருக்‌ஷா என்ற பெயரில் இரண்டு நாள் தொடர் மருத்துவ கல்வித்திட்டத்தை நடத்தி வருகிறது.

இந்தாண்டு 17வது பதிப்பாக நடைபெறும் இப்பயிலரங்கம் சிறப்பாக தொடங்கியது. இதில் 250க்கும் அதிகமான மாணவர்களும், 30 கல்வியாளர்களும் பங்கேற்கின்றனர்.

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் இயக்குநர் அதியா அகர்வால் மற்றும் இப்பயிலரங்கின் அமைப்பு செயலாளர்களான, டாக்டர். சௌந்தரி, டாக்டர். திவ்யா அசோக் குமார் மற்றும் டாக்டர் ப்ரீத்தி நவீன் ஆகியோர் முன்னிலை வகிக்க தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் ராஜேஷ் லக்கானி இப்பயிலரங்கு நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.

இதில் நாள் ஒன்று அன்று ஒரு வெட் லேப் அமர்வு மற்றும் நாள் இரண்டின் போது ஒரு வினாடி வினா செயல்திட்டம் ஆகியவை இடம்பெறுகின்றன.
சிறப்பான சமர்ப்பிப்பாக தேர்வு செய்யப்படும் மருத் துவ நேர்வுக்கு டாக் டர். அகர்வால் விருது வழங்கப்படும்.

படிக்க வேண்டும்

spot_img