அகில இந்திய பேங்க் ஆப் இந்தியாவின் எஸ்சி/எஸ்டி/ஓபிசி சங்கத்தின் தென்னக பிரிவு மற்றும் பேங்க் ஆப் இந்தியாவின் மதுரை மண்டலம் சார்பில் மதுரை சேவாலயம் மாணவர் விடுதிக்கு ரூ.40ஆயிரம் மதிப்புள்ள கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்தநாளை அகில இந்திய பேங்க் ஆப் இந்தியாவின் எஸ்சி/எஸ்டி/ஓபிசி சங்கத்தின் தென்னகப் பிரிவும் மதுரை மண்டல பேங்க் ஆப் இந்தியாவும் இணைந்து கொண்டாடியது. இதையொட்டி மதுரை ஷெனாய் நகரில் உள்ள சேவாலயம் மாணவர் விடுதிக்கு ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள கல்வி உபகரணங்களை வழங்கினர்.
இந்த நன்கொடை வழங்கும் நிகழ்வில், அகில இந்திய பேங்க் ஆப் இந்தியாவின் எஸ்சி/எஸ்டி/ஓபிசி சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பொற்செழியன், கௌரவத் தலைவர் ஏ.துரைராஜன் மற்றும் சங்கத்தின் பிற நிர்வாகிகள் மற்றும் பேங்க் ஆப் இந்தியாவின் துணை மண்டல மேலாளர் ஸ்ரீஹர்ஷா மகாதேவ ஜோய்ஸ், மனித வளத் தலைமை அலுவலர் பி.பாரதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வு சமூக நலன் மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் கௌரவிப்புச் செயல்பாடுகளை பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.