fbpx
Homeபிற செய்திகள்டாக்டர். அகர்வால்ஸ் மருத்துவமனையில் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம்

டாக்டர். அகர்வால்ஸ் மருத்துவமனையில் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம்

சென்னை தாம்பரத்தில் இயங்கி வரும் டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவ மனை, இரு மேம்பட்ட தொழில்நுட்ப சாதனங்கள் அறிமுகத்தின் மூலம் அது வழங்கி வரும் கண் பராமரிப்பு சேவைகளை மேம்படுத்துகிறது.
கிட்டப்பார்வை, தூரப்பார்வை மற்றும் சிதறல் பார்வை போன்ற பாதிப்புகளுக்கான சிகிச்சை செயல்முறைகளில் பிழைகளை துல்லியமாக சரிசெய்வதற்கு அல்கான் வேவ்லைட் EX500 வழிவகுக்கிறது.

அலீக்ரோ டோப்போ லைஸர் -வேரியோ சாதனம், விழிப்பாவை நடுப்புள்ளி மாற்றங்களை கண்டறிந்து, துல்லியமான சிகிச்சை திட் டமிடலை அனுமதிக்கிறது. லாசிக் அல்லது பிற ஒளிவிலகல் அறுவை சிகிச்சைகளின் போது கண்களின் சுழற்சி நகர்வு மேலாண்மையில் துல்லிய மான கட்டுப்பாட்டை இது வழங்குகிறது.

இம்மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி மற்றும் துணை மேயர் காமராஜ் ஆகியோர் தொழில்நுட்ப சாதனங்களின் சேவைகளை தொடங்கி வைத்தனர்.
மருத்துவமனையின் மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவர் டாக்டர்.
ஸ்ரீனிவாச ராவ் பேசுகையில், “அனைத்து வயது பிரிவைச் சேர்ந்த நோயாளிகளுக்கும் கண் பராமரிப்பு சேவைக்கு முழுமையான அணுகு வசதி கிடைப்பதை இம்ம ருத்துவமனை உறுதி செய்கிறது” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img