கரூர் மாநகராட்சிக்கு உட் பட்ட, திருவள்ளூர் மைதானத்தில், மாவட்ட திமுக சார்பில் கரூர் லோக்சபா தொகுதி பிரச்சார கூட்டம் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச் சர் சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நீலகிரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆ.ராசா, வேடசந்தூர் எம்எல்ஏ காந்தி ராஜன், அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ, கிருஷ்ண ராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, கரூர் மேயர் கவிதா, துணை மேயர் சரவணன் உள்ளிட்ட மாவட்ட அளவிலான, பல்வேறு அணிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராள மானோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றிய நீலகிரி எம்பி ஆ.ராசா பேசியதாவது:
நாடாளுமன்றத்தில் லோக்சபா கூட்டம் நடக்கும் போது பிரதமர்கள் வெளிநாடு செல்வதில்லை என்பது மரபு. அதை மீறி பிரதமர் மோடி வெளிநாடு செல்கிறார். மேலும், கேள்வி நேரத்தில் லோக்சபாவில் இருப்பதும் கிடையாது. ஊழல் குற்றச்சாட்டு கூறினால் அதற்கு பதில் கூறுவதும் இல்லை.
தேர்தல் பத்திரம் மூலம் 6500- கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது? இதற்கு பதில் சொல்வாரா பிரதமர் மோடி?
பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் அண்ணாமலை ஆறாவது ஆடியோ டேப் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அவர் 60 டேப்புகள் வெளியிட்டாலும் ஊழல் செய்யாதபோது, என்னை என்ன செய்ய முடியும்? பல்வேறு ஊழலில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சி, ஊழலைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?
மேலும், ஒரு பக்கம் ஊழல், ஒரு பக்கம் மதவாதம் இதுதான் பத்தாண்டு கால மோடி ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது.
இயற்கை பேரிடர் சீற்றத்தால் தமிழகம் பாதிக்கப்பட்ட போது, 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதி கேட்டால், 1500 கோடி ரூபாய் கொடுத்துவிட்டோம் என பதில் சொல்லுகின்றனர்.
அது குறித்து கேள்வி எழுப்பிய போது, 15வது நிதி கமிஷன் ஒதுக்கப்பட்ட பணத்தை கொடுத்துவிட்டு, வெள்ள நிவாரணநிதி கொடுத்து விட்டோம் என பொய்யான தகவலை கூறு கின்றனர்.
ஒரு பக்கம் ஊழல், ஒரு பக்கம் மதவாதம் இப்படி எல்லா விதத்திலும் செயல்பட்டு வரும் மோடியை எதிர்த்து நிற்க வடமாநிலத்தில் தலைவர்கள் இல்லை. அவர்கள் எல்லோரும் தயங்கு கிறார்கள், பயப்படுகிறார்கள்.
அந்த தயக்கத்தையும் பயத்தையும் போக்கி இந்தியாவை வெல்லக் கூடிய ஒரே அரசியல் தலைவராக ஸ்டாலின் உள்ளார். அவர் வழியில் நடப்போம் மோடியை வீழ்த்து வோம். இவ்வாறு ஆ.ராசா எம்பி தெரிவித்தார்.