fbpx
Homeபிற செய்திகள்தர்மபுரி பெண்களுக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி

தர்மபுரி பெண்களுக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி

தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இய க்கம் சார்பாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைச் சார்ந்த மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி 3 நாட்கள் வழங்கப்பட்டது.

தர்மபுரி நகராட்சியில் நடைபெற்ற இந்த பயிற்சியினை மகளிர் திட்ட இயக்குனர் அ.லலிதா பார்வையிட்டு பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பயிற்சி உபகரணங்களை வழங்கினார்கள்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர் கா.முருகேசன் மற்றும் சமுதாய அமைப்பாளர்கள் திரேஷா, காயத்ரி ஆகியோர் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img