தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய்மை பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்க ளுக்கு நலத்திட்ட உதவி களை 36வது வார்டு கவுன்சிலர் செந்தில்குமார் தனது சொந்த நிதியில் வழங்கி அசத்தியுள்ளார்.
ஈரோடு மாநகராட்சி 36வது வார்டு மாமன்ற உறுப்பினரும், திமுக விவ சாய அணி ஈரோடு மாநகர துணை செயலாளராக பதவி வகித்து வருபவர் என்.செந்தில்குமார். இவர் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கும், தூய்மை பணி யாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவது வழக்கம்.
இதன்படி, நடப்பாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாநகராட்சி 36வது வார்டில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்ட பணி யாளர்கள், வாகன ஓட்டுநர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் உட்பட பல்வேறு பிரிவுக ளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இனிப்பு, பட்டாசு பாக்ஸ், புத்தா டைகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவுக்கு 36வது வார்டு கவுன்சிலர் என்.செந்தில்குமார் தலைமை தாங்கி, அவரது சொந்த நிதியில் 250க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு இனிப்பு, பட்டாசு, புத் தாடைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், செந்தில் குமாரின் தந்தையான பழ னியப்பா எலக்ட்ரிக்கல் ஹார்டுவேர் நிறுவனத்தின் உரிமையாளரான பழனி யப்பா நாராயணசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
தொடர்ந்து, விழாவில் கவுன்சிலர் செந்தில்குமார் பேசுகையில், திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து மக்களுக்கும் நல்லது நடந்து வருகிறது. அதேபோல தூய்மை பணியாளர்களான உங்களது ஊதிய உயர்வுக்கான கோரிக்கை மாநகராட்சியின் அனைத்து கவுன்சிலர்களின் சார்பில் அழுத்தம் கொடுத்துள்ளோம்.
தற்போது, அந்த கோரிக்கை முதல்வரின் கவனத்தில் உள்ளது. விரைவில் அதற் கான தீர்வு கிடைக்கும், என்றார். முன்னதாக விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் சமபந்தி விருந்தும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், 36வது வார்டில் உள்ள முக்கிய பிரமுகர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவினை உதவியாளர் கௌதம் மற்றும் 36வது வார்டு இளைஞர்கள் ஒருங்கிணைத்து நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.