fbpx
Homeபிற செய்திகள்தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி

தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி

தென்னிந்திய அளவிலான இரண்டு நாள் கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஈரோடு திண்டல் வெள்ளாளர் சிபிஎஸ்சி பள்ளியில் நேற்று நடந்தது.

அகில இந்திய மரபு கராத்தே விளையாட்டு சங்க இணை செயலாளர் மற்றும் தேசிய நடுவர் ஏ.சக்திவேல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.

ஞாயிறு அன்று நடந்த நிறைவு விழவில் தமிழ் மாநில காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர் மற்றும் நிர்வாகிகள் எஸ்.டி.சந்திரசேகர், யுவராஜா, ஆறுமுகம், ரமேஷ் மற்றும் அகில இந்திய கராத்தே முதன்மை ஆலோசகர் கராத்தே தியாகராஜன், ஸ்போர்ட்ஸ் ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

சுமார் 2000 மாணவ மாணவிகள் போட்டியில் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு சைக்கிள்கள், கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img