fbpx
Homeபிற செய்திகள்ஈரோட்டில் கிக் பாக்சிங் போட்டி: பிரகாஷ் எம்.பி. பரிசு வழங்கினார்

ஈரோட்டில் கிக் பாக்சிங் போட்டி: பிரகாஷ் எம்.பி. பரிசு வழங்கினார்

ஈரோடு மாவட்ட கிக் பாக்சிங் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான போட்டிகள் ஈரோடு பாரதி நகர் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

போட்டியை துவக்கி வைத்த எம்பி பிரகாஷ் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.

சங்கத் தலைவர் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு தலைமை வகித்தார். இதில் தங்க பதக்கம் வென்றவர்கள் சென்னையில் அடுத்த மாதம் 9,10, 11 தேதிகளில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கின்றனர் என்று சங்க பொதுச் செயலாளர் யூசுப் தெரிவித்தார்.

மாமன்ற உறுப்பினர்கள் ராமலிங்கம், சுபலட்சுமி ஜெயக்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ்குமார், உடற்கல்வி ஆய்வாளர் சாலமன், விசிக மாவட்ட செயலாளர் சாதிக், தவெக துணை செயலாளர் ஹக்கீம், சங்க நிர்வாகிகள் ராஜா, செங்கோட்டையன், மகேந்திர குமார், கிருபாகரன், சங்கர் ராபின் டேவிட் குமார், ஷேக் முகமது, ஷரீப் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img