fbpx
Homeபிற செய்திகள்மேஜைப் பந்து போட்டியில் ஈரோடு கொங்கு கல்வி நிலையம் சாதனை

மேஜைப் பந்து போட்டியில் ஈரோடு கொங்கு கல்வி நிலையம் சாதனை

கல்வித்துறை சார்பில் மாநில அளவில் நடைபெற்ற 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மேஜைப்பந்து போட்டி தேனி மாவட்டம், கம்பம், ஆர்.ஆர்.இண்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது.

இதில் ஈரோடு ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி செல்வி.எஸ்.தாரிணி கலந்து கொண்டு விளையாடினார். இறுதியில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கத்தை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.

வெற்றி பெற்ற மாணவியை பாராட்டி பள்ளியின் தலைவர் எம்.சின்னசாமி, தாளாளர் கே.செல்வராஜ், பொருளாளர் ஆர்.குணசேகரன், மற்றும் உதவி தலைவர்கள் எஸ்.கே.சோமசுந்தரம், ஆர்.எம்.தெய்வசிகாமணி, இணைச் செயலாளர் டி.மீனாட்சிசுந்தரம், இணைப் பொருளாளர் வி.நாகராஜன், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், முதல்வர் டி.நதியா அரவிந்தன் அவர்கள், மாணவி மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பாராட்டி கௌரவப்படுத்தினார்.

படிக்க வேண்டும்

spot_img