fbpx
Homeபிற செய்திகள்மாநில ஜிஎஸ்டி அலுவலக கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

மாநில ஜிஎஸ்டி அலுவலக கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

ஈரோடு ஆனைக்கல்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்ட மாநில ஜிஎஸ்டி அலுவலகத்தை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆன்லைன் மூலம் இன்று (சனிக்கிழமை) திறந்து வைத்தார்.

சக்தி மற்றும் கோபியில் ஜிஎஸ்டி அலுவலகத்தின் புதிய கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார். கட்டிடங்களின் மொத்த மதிப்பு ரூ.17.86 கோடி. லக்காபுரம், கஸ்பாபேட்டை, பூனாச்சி ஆகிய இடங்களில் உள்ள நடுநலைபள்ளிகளில் 2 கூடுதல் வகுப்பறை கட்டடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார். கட்டிடங்களின் மதிப்பு ரூ.90.40 லட்சம்.

ஈரோடு மாஸ்டர் பிளான் 2041 குறித்த உள்ளூர் திட்ட குழும (டி.டி.சி.பி) இணையதளத்தையும் திறந்து வைத்தார். இதன் மூலம் பொதுமக்கள் ஈரோடு மாநகர் வளர்ச்சி குறித்த தங்கள் ஆலோசனைகளை 60 நாட்களுக்குள் தெரிவிக்கலாம்.

படிக்க வேண்டும்

spot_img