ஈரோடு செங்குந்தர் கல்விக் கழகம் ஈரோடு வி விசிஆர் முருகேசனார் செங்குந்தர் மகளிர் மேல்நிலைப் பள்ளி சார்பில் உலக மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் மாரத்தான் ஓட்ட பந்தயம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஈரோடு எஸ்பி ஜவகர் துவக்கி வைத்தார்.
இதில் 5 வயது 30 வயது வரை சுமார் 1400 பேர் கலந்து கொண்டனர். செயலாளர் சிவானந்தம் பரிசுகளை வழங்கினார்.
நிர்வாகிகள் மாசிலா மணி, ரவிச்சந்திரன், புஷ்பராஜ், ரவி, கிருஷ்ணகுமார், முருகேசன், கலைச்செல்வன், அங்க முத்து, ராமச்சந்திரன், வி.ஜி.டி. வேலு, கமலக் கண்ணன் கலந்து கொண்டனர்.