fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியின் ஆண்டு விழா

ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியின் ஆண்டு விழா

ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியின் 55-வது ஆண்டு விழா நடைபெற்றது. எழுத்தாளரும் பேச்சாளருமான தமிழருவி மணியன் சிறப்புரையாற்றினார். பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் திருச்சி மண்டல மேலாளர் சாமுவேல் ஸ்டீபன், உதவி மேலாளர் எஸ்.சந்தோஷ்குமார் வாழ்த்துரை வழங்கினர்.

சாதனை மாணவிகளுக்கு பரிசுகளையும் விருதுகளையும் விஐடி வேந்தர் விஸ்வநாதன் வழங்கினர். கல்லூரி தலைவர் ஜெயக்குமார், செயலர் சந்திரசேகர், முதல்வர் செ.கு.ஜெயந்தி, இயற்பியல் துறை உதவிப்பேராசிரியர் அனிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

25 ஆண்டுகள் கல்லூரி சேவையைப் பாராட்டி பேராசிரியர்கள் பார்வதி, இந்துமதி, சரஸ்வதி ஆகியோருக்கு சான்றிதழும், பரிசும் வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img