ஈரோடு விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரிகளுக்கிடையேயான கலாச்சார திருவிழா “யுகா – 25” நடைபெற்றது. சிறப்பு விருந்தினர் மாஸ்டர் திரைப்பட நடிகை மாளவிகா மோகனன், கேபிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியினருக்கு ஒட்டுமொத்த சேம்பியன்சிப் கோப்பையை வழங்கினார்.
கல்லூரி தலைவர் சி.ஜெயக்குமார், செயலாளர் செ.து. சந்திரசேகர், நிர்வாகிகள் ச.பாலசுப்ரமணியன், எம்.யுவராஜா, முதல்வர் முனைவர் வெ.ப. நல்லசாமி மற்றும் கல்லூரி நிர்வாக அலுவலர் முனைவர். சி. லோகேஷ் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.62 கல்லூரிகளிலிருந்து 1000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
முதலாவதாகக் கஸ்தூரிபா கலையரங்கத்தில் குழுநடனமும் காமராஜர் கலை அரங்கத்தில் தனிநடனமும் நடைபெற்றது. மற்றொருபுறம் ராமானுஜன் அரங்கில் தனிப்பாடல் மற்றும் குழுப்பாடல் போட்டிகள் நடைபெற்றன.
இது தவிர நுண் கலைகள் சார்ந்த ஃபேஸ் ஃபேபிள்ஸ், ஃபேஷன் ஷோ ஆர்ட்ஸ், டிஜிட்டல் ஆர்ட்ஸ், நெருப்பில்லா சமையல் கலை. டேலண்ட் ஹன்ட் மற்றும் ஃபேஷன் ஷோ ஆர்ட்ஸ், கிரியேட்டிவ் ஆர்ட்ஸ் ஆகிய நிகழ்வுகள் பங்கேற்பாளர்களிடமிருந்து மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அனைத்து நிகழ்வுகளும் அந்தந்தப் போட்டிப் பிரிவுகளைச் சார்ந்த நிபுணத்துவம் பெற்ற நடுவர்களால் மதிப்பீடு செய்யப்பட்டன.
பிற்பகல் 2.30 மணி அளவில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாஸ்டர் திரைப்பட நடிகை மாளவிகா மோகனன் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தார்.
அங்கு ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்குக் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இப்பண்பாட்டுத் திருவிழாவில் மருத்துவம், பொறியியல் மற்றும் கலை & அறிவியல் பிரிவுகளில் . ‘யுகா – 2025’ திருவிழாவில் நடைபெற்ற போட்டிகளில் பெருவாரியான போட்டிகளில் வெற்றிபெற்று கோவை அரசூர் கே.பி.ஆர்.கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது.
விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அவர்களின் முயற்சிகள் மற்றும் பங்களிப்புகளை அங்கீகரித்து பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
வணிகவியல் உதவிப் பேராசிரியை முனைவர் ஆர். மகேஸ்வரி மற்றும் உதவிப் பேராசிரியர் முனைவர் எஸ். இளங்கோ ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இரண்டாமாண்டு மாணவி செல்வி எம்.ரேஸ்மா நன்றி கூறினார். இந்த நிகழ்வில் 62 கல்லூரிகளிலிருந்து 1,000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.