யூத் ஹாஸ்டெல்ஸ் அஸோசியேஷன் ஆப் இந்தியா கொங்கு கிளை சார்பில் தேசிய விளையாட்டு தினம், தேசிய சிறு தொழில் தினம், பெண்கள் சமத்துவ தினம் மற்றும் உலக நாய் தினம் செங்கோடம்பாளையம் அரசு துவக்கப்பள்ளியில் செவ்வாயன்று நடைபெற்றது.
யூத் ஹாஸ்டெல்ஸ் மாநில தலைவர் டாக்டர். ராஜா, சேர்மேன் ஐயப்பன், செயற்குழு உறுப்பினர் சூர்யா, செந்தில்குமார், கிளையின் தலைவர் சந்திரா தங்கவேல், தலைமை ஆசிரியை பூங்கொடி, ஆசிரியர்கள் மாதேஷ், சாந்தி,மரகதம் சிறப்புரை வழங்கினர்.
தேசிய விளையாட்டு தினத்தையொட்டி 8 போட்டிகள் நடைபெற்றன. முதல் மூன்று இடங்களைப்பிடித்த மாணவ மாணவியர்களுக்கு செயலர் டாக்டர். ராஜா பரிசுகளை வழங்கினார்.