fbpx
Homeபிற செய்திகள்யூத் ஹாஸ்டெல்ஸ் சார்பில் குடியரசு தின விழா

யூத் ஹாஸ்டெல்ஸ் சார்பில் குடியரசு தின விழா

யூத் ஹாஸ்டெல்ஸ் சார்பில் நஞ்சப்பகவுண்டன்வலசு அரசு துவக்கப்பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா மற்றும் குடியரசு தின விழா, யூத் ஹாஸ்டெல்ஸ் அஸோசியேஷன் ஆப் இந்தியா கொங்கு கிளையின் பவளவிழா ஆண்டின் முப்பதாவது நிகழ்வாக தேசிய பெண் குழந்தைகள் தினம் மற்றும் குடியரசு தின விழா ஈரோடு நஞ்சப்பகவுண்டன்வலசு அரசு துவக்கப்பள்ளியில் தலைமையாசிரியை புனிதவதி தலைமையில் ஜனவரி 26 அன்று காலை 7.30 மணிக்கு நடைபெற்றது.

யூத் ஹாஸ்டெல்ஸ் மாநில துணைத் தலைவர் டாக்டர். ராஜா முன்னிலை வகித்தார். முன்னதாக டாக்டர். ராஜா தேசியக் கொடியேற்றினார். பின்னர் நடைபெற்ற விழாவில் துணைத் தலைமையாசிரியை ஜீன்ஸீலியா வரவேற்புரையாற்றினார்.

இல்லம் தேடி கல்வி ஆசிரியை கீர்த்தனா, சேர் மன் டாக்டர் ஐயப்பன், செயற்குழு உறுப்பினர்கள் செந்தில் குமார், டாக்டர். குமரேசன் மற்றும் ராஜா சூர்யா வாழ்த்துரை வழங்கினார்கள். பின் இடைநிலை ஆசிரியை சிவகாமி குடியரசு தினத்தையொட்டி சிறப்புரையாற்றினார்.

பின் தேசிய பெண் குழந்தைகள் தின சிறப் புரையை ஆசிரியை கலை மணி வழங்கினார். பின்னர், ஓவியம் மற்றும் பேச்சுப்போட்டியில் பங்குபெற்று வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாமன்ற உறுப்பினர் நந்த கோபு அவர்களும் மற்றும் கவிதை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கொங்கு கிளையின் ஒருங்கிணைப்பாளர் கனகராஜன் ஆகியோர் முப்பது பரிசுகளை வழங்கினார். நிறைவாக ஆசிரியை அம்சவல்லி நன்றியுரையாற்றினார். பின்னர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்த விழாவில் யூத் ஹாஸ்டெல்ஸ் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கு பெற்றனர். இந்த நிகழ்வை கிளையின் தலைவர் சந்திரா தங்கவேல் மற்றும் தலைமையாசிரியை புனிதவதி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

படிக்க வேண்டும்

spot_img