fbpx
Homeபிற செய்திகள்கோவையில் ஜவுளி இயந்திரங்கள் கண்காட்சி துவங்கியது

கோவையில் ஜவுளி இயந்திரங்கள் கண்காட்சி துவங்கியது

கோவையில் துவங்கிய சர்வதேச அளவிலான ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்கள் குறித்த கண்காட்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஜவுளி இயந்திர தயாரிப்பாளர்கள் பங்குபெற்றுள்ளனர்.நாட்டில் ஜவுளி என்பது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. அத்தகைய ஜவுளி ஆலைகள் ஒவ்வொரு வருடமும் ஆண்டு மொத்த விற்பனையில் 3சதவீதம் வரை உதிரிபாகங்கள் வாங்குவதற்கும், 4முதல் 6சதவீதம் வரை ஜவுளி இயந்திரங்களை புதுப்பிக்க செலவினம் செய்து வருகின்றனர்.

அத்தகைய ஜவுளி தொழில்துறையினருக்கு பயன்பெறும் வகையில், உள்நாட்டிலேயே குறைந்த விலையில் இயந்திரங்களையும், உதிரிபாகங்களையும் உற்பத்தி செய்வோரை ஊக்குவிக்கும் விதமாகவும் ஜவுளி தொழில்துறை யினருக்கு ஒரே கூரையின் கீழ் அனைத்தும் கிடைக்கும் வித மாக தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் சார்பாக கோவை கொடிசியா வளாகத்தில் சர்வதேச அளவிலான கண்காட்சி இன்று துவங்கியது.கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி பி.ராஜ்குமார் துவக்கி வைத்த இந்த கண்காட்சி இன்று முதல் வரும் 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் தமிழகம் மட்டுமல்லாமல் குஜராத், மராட்டியம், மத்திய பிரதேசம், மேற்குவங்கம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் டையூ, தாத்ராநகர்,ஹாவேலி ஆகிய யூனியன் பிரதேசங்கள், ஸ்விட்சர்லாந்து, இத்தாலி ,ஜப்பான், சீன நாடுகளை சேர்ந்த 240 ஜவுளி இயந்திர தயாரிப் பாளர்கள் ஸ்டால்கள் அமைத்து, இந்த கண்காட்சியில் பங்கு பெற்றுள்ளனர். மேலும் இந்த கண்காட்சியின் மூலம் ரூபாய் 1500 கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெறும் என எதிர் பார்க்கப்படுவதாக தென்னிந்திய பஞ்சாலை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img