கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் சேர் பெர்சன் நந்தினி அறிவுறுத்தலின் பேரில் அழகு மற்றும் ஆரோக்கிய துறை டிபார்ட்மெண்ட் சார்பில் 2 நாட்கள் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இதில், செயல்விளக்கம், பிரபல நிறுவனங்களின் அழகு சாதனங்கள் விற்பனை, அழகு துறை மாணவிகளின் மணப் பெண் அலங்காரப் போட் டிகள் நடைபெற்றது. ப்ரோ ஜி ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் இணை ந்து நடத்திய இதில் அழகு சாதனப் பொருட்களின் கண்காட்சி நடைபெற்றன.
இதில், பாலிவுட் புகழ் அமிதாப்பச்சன், ஸ்ரீ தேவி, மாதிரி தீக்க்ஷித், கரிஷ்மா கபூர், ரம்யா கிருஷ்ணன், கங்கணா ரணாவத் உள்ளிட்ட பிரபலங்களின் சிகை அலங்கார நிபுணர்கள் ஒப்பனை கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பாலிவுட் பட உலக ஒப்பனைக் கலைஞர் ராஜு ஓர்பே, சினிமா பட ஒப்பனை நேரடி செயல் விளக்கம் அளித்தார். சர்வதேச சிகை அலங்கார நிபுணர் சமீர் சால்வா சிகை அலங்காரம் பற்றிய செயல் விளக்கம் அளித் தார். தோல் மற்றும் முடிக் கான சிகிச்சை அளிக்கும் அழகு சாதனவியல் மருத்துவர் ஷனாஸ் கான் தோல் சிகிச்சை, மங்கு சிகிச்சை பற்றி நேரடி செயல் விளக்கம் வழங்கி னார். இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.