இஒய் ஜிடிஎஸ் நிறுவனம் கோவை கேசிடி டெக் பார்க் சரவணம்பட்டியில் புதிய
அலுவலகத்தை தொடங்கியுள்ளது. இது தமிழ்நாட்டின் தகவல் தொழில் நுட்பத்துறையில் மிகப்பெரிய மைல் கல்லாகவும், பெரிய துவக்கமாகவும் அமையும்.
சுமார் 22,000 சதுர அடி அள வில் நிர்வாக அலுவலகம் மற்றும் தொழில்நுட்ப அலுவலகம் என திறக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச் சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
இதில் இஒய் ஜிடிஎஸ் நிறுவனத்தின் சர்வதேச இயக்கத் தலைவர் மனிஷ் பட்டேல், இந்நிறுவனத்தின் ஆலோசனைத் தலைவர் ராகவேந்திரா ரங்கசாமி மற்றும் பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் நிபுணர்களும், கல்வியாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிறுவனத்தின் தொடக்கம் தமிழகத்தின் தொழில்முறை வர்த்தகம் சார்ந்து முத்திரை பதிக்கும், அறிவுசார் (AI) தொழில்நுட்பத்திற்கான மிகப்பெரும் சூழலை உருவாக்க செயல்படும்.
கோவை கிளையின் செயல்பாடுகள் குறித்து இந்நிறுவனத்தின் செயல்பாட்டுத் தலைவர் மணிஷ் பட்டேல் கூறுகையில், “உலகளாவிய மாற்றங்களை கொண்டு வரக்கூடிய நீடித்த வளர்ச்சிக்கான அடித்தளமாக இக்கிளை இயங்கும்“ என்றார்.
தொடர்ந்து அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் கூறுகையில், “தமிழக அரசின் புதுமையான தொழில்நுட்பம் சார்ந்த முயற்சிகளில் இந்நிறுவனத்தின் தொடக்கம் ஒரு மைல்கல். இது தமிழ்நாட்டின் பொறியியல் சார்ந்த திறனுக்கு ஒரு வடிகாலாக அமையும்“ என்றார்.