fbpx
Homeதலையங்கம்சிறு ‘ஏடிஎம்’களாக மாறும் நியாய விலைக் கடைகள்

சிறு ‘ஏடிஎம்’களாக மாறும் நியாய விலைக் கடைகள்

குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கு நியாய விலைக் கடைகள் (ரேஷன் கடைகள்) மூலம் குறைந்த விலையில் அரசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருள்கள் விற்கப்பட்டு வருகின்றன. பொங்கல் திருநாளின்போது அரிசி, கரும்பு, இலவச வேட்டி, சேலை உள்ளிட்டவையும் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த நியாயவிலைக் கடைகளில் இன்னொரு சூப்பர் வசதியும் இனி கிடைக்கப்போகிறது. அதாவது, தமிழக மக்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை எடுக்க இனி தானியங்கி வங்கி இயந்திரத்தைத் (ஏடிஎம்) தேடி ஓட வேண்டியிராது. நியாய விலைக் கடைகளிலேயே அவர்கள் தங்கள் வங்கிக் கணக்கிலுள்ள பணத்தை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு கூட்டுறவுத் துறை மூலம் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக இது, வங்கிக்கோ அல்லது ஏடிஎம் மையங்களுக்கோ செல்லமுடியாத நிலையில் இருக்கும் பாமர மக்களுக்கு பேருதவியாக இருக்கும். இதன்படி, முக்கிய வங்கிச் சேவைகளை வழங்கும் மின்னிலக்கக் கருவிகள் நியாய விலைக் கடைகளில் நிறுவப்படும். அதற்கென தனியாக ஒருவர் பணியமர்த்தப்படுவார் என்றும் அச்சேவையை வழங்குவதற்கான நியாய விலைக் கடைகளை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த வசதி செயல்பாட்டுக்கு வரும்போது, தமிழ்நாடு அரசு மக்கள் நலன் கருதி செயல்படுத்தி வரும் நல்ல திட்டங்களின் பட்டியலில் இந்தச் சிறிய திட்டமும் இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் இது சாமான்ய மக்களுக்கு உதவும் அருமையான திட்டம்.
விரைவில் நியாய விலைக் கடைகள் சிறு ஏடிஎம்களாக மாறட்டும்!

படிக்க வேண்டும்

spot_img