fbpx
Homeபிற செய்திகள்இலவச வண்டல் மண்- முதல்வருக்கு விவசாயிகள் நன்றி

இலவச வண்டல் மண்- முதல்வருக்கு விவசாயிகள் நன்றி

ஏரி, குளம் மற்றும் கண்மாய்களில் இருந்து களிமண் / வண்டல் மண்ணை விவசாய பயன்பாட்டிற்கும், மண்பாண்டம் செய்வதற்கும் கட்டணமின்றி எடுப்பதற்கு அனுமதி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தூத்துக்குடி மாவட் விவசாய பெருமக்கள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் (8.7.2024) அன்று தலைமைச் செயலகத்தில், இயற்கை வளங்கள் துறையின் சார்பில், நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஏரி, குளம் மற்றும் கண்மாய்களிலிருந்து களிமண் / வண்டல் மண்ணை விவசாயப் பயன்பாட்டிற்கும், மண்பாண்டம் செய்வதற்கும் கட்டணமின்றி எடுத்துப் பயன்பெறுவதற்கான அனுமதி ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்கள்.
நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகட்டுப்பாட்டில் உள்ள ஏரி / குளம் / கண்மாய்களில் உள்ள வண்டல் மற்றும் களிமண் ஆகியவற்றை விவசாய பெருமக்கள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்கள் விவசாய பயன்பாட்டிற்கும் மற்றும் மண்பாண்டம் செய்வதற்கும் கட்டணமின்றிஎடுத்துச் செல்லலாம் என்றும், இதன்மூலம் இவர்கள் பயன்பெறுவதோடு, ஏரி / குளம் மற்றும் கண்மாய்கள் ஆழப்படுத்தப்பட்டு அதிக மழைநீரைச் சேமித்திட இத்திட்டம் உதவும் என்றும் முதலமைச்சர் அவர்களால் 12.06.2024 அன்றுஅறிவிக்கப்பட்டது.

முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, இத்திட்டத்தினை எளிமையாகச் செயல்படுத்திட, தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகள், 1959-ல் அரசுஆணை எண்.14, இயற்கைவளங்கள் துறை, நாள் 12.06.2024 அன்றுதிருத்தம் செய்யப்பட்டு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர்களுக்குப் பதிலாக வட்டாட்சியர்களால் அனுமதி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், பயனாளிகள் தங்களது கிராமத்தில் அமைந்துள்ள நீர்நிலைகள் உட்பட அவர்கள் சேர்ந்தவட்டத்தில் அமைந்துள்ள நீர்நிலைகளிலும் வண்டல் மற்றும் களிமண் ஆகியவற்றை எடுத்துச் செல்லலாம். நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் செயற்பொறியாளர்கள், புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் துணை இயக்குநர்/ உதவி இயக்குநர், வட்டாட்சியர்கள், கிராம நிருவாக அலுவலர்கள் மற்றும் ஏரி, குளம் மற்றும் கண்மாய் பொறுப்பாளர்களுக்கு இத்திட்டத்தினை செயல்படுத்திட வழிகாட்டும் நெறிமுறைகள் இயற்கை வளங்கள் துறையால் 25.06.2024 அன்றுவெளியிடப்பட்டது.

இத்திட்டத்தினை, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 விவசாய பெருமக்கள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்களுக்கு அனுமதி ஆணைகளை வழங்கி, தொடங்கி வைத்தார்கள்.
அதன்படி, 08.07.2024 முதல் விவசாயபெருமக்கள் மற்றும் மண்பாண்டதொழில் செய்வோர் tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தேர்வு செய்யப்பட்ட 875 நீர்நிலைகளிலிருந்து (ஏரி / குளம் / கண்மாய்/ குட்டை/ஊரணி) வண்டல் மற்றும் களிமண் எடுப்பதற்கு ஏதுவாக தூத்துக்குடி மாவட்ட அரசிதழ் சிறப்புவெளியீடு எண்.3, நாள் 01.07.2024ல் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட நீர்நிலைகளிலிருந்து வண்டல் மற்றும் களிமண்ணை விவசாயப் பயன்பாட்டிற்கும், மண்பாண்டம் செய்வதற்கும் கட்டணமின்றி எடுத்து பயன்பெறுவதைத் தொடங்கிவைக்கும் விதமாக, விளாத்திகுளம் குளத்தூர் தெற்கு கண்மாயிலிருந்து வண்டல் மண் எடுப்பதற்கான அனுமதி ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி பயனாளிகளுக்கு வழங்கி, தொடங்கிவைத்தார்கள்.

ஏரி,குளம் மற்றும் கண்மாய்களிலிருந்து களிமண் / வண்டல் மண்ணை விவசாய பயன்பாட்டிற்கு கட்டணமின்றி எடுத்து பயன்பெறுவதற்கான அனுமதி ஆணை பெற்ற பயனாளி மகிழ்ச்சியுடன் தெரிவிக்கையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பணிவான வணக்கம். தூத்துக்குடிமாவட்டம் விளாத்திகுளம் தாலுகா,குளத்தூர் கிராமத்தில் வசித்துவருகிறேன். எனதுபெயர் பெரியகருப்பன்.
எனக்குசொந்தமாக 6 ஏக்கர் நஞ்சை நிலங்கள் உள்ளது. நீர்நிலைகளிலிருந்து வண்டல் மற்றும் களிமண்ணை விவசாய பயன்பாட்டிற்கு எடுக்க கட்டணமின்றி அனுமதிவழங்கப்படும் என முதலமைச்சர் அவர்கள் அறிவித்தது விவசாயிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. என்னுடைய நிலங்களுக்கு தேவையான வண்டல் மண் எடுப்பதற்கு tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து அனுமதி பெற்றுள்ளேன். என்னுடைய நிலங்களுக்கு தேவையான வண்டல் மண்ணை எடுத்து பயன்படுத்தவுள்ளேன். இதன்மூலம் என் விவசாயநிலம் மேம்படுவதுடன் மண்வளம் உயரும். விவசாயம் மென்மேலும் பெருகும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இப்படியொரு மகத்தான திட்டத்தை செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை விவசாயிகள் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுமட்டுமல்லாமல், இத்திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம் நீர்நிலைகளில் அதிகப்படியான நீர் சேமிக்கமுடியும். அவ்வாறுநீர் சேமிக்கும்போது, நீர்நிலைகளை சுற்றியுள்ள ஆழ்துளைக் கிணறுகள், திறந்தவெளி கிணறுகளில் நிலத்தடிநீர்மட்டம் உயரும். இதனால், பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி கிடைப்பதுடன், விவசாயிகளின் பாசனப் பரப்பும் மேன்மையடையும். பெரும்பாலான மக்களுக்கு வாழ்வாதாரத் தொழிலாக உள்ள வேளாண்மைத் தொழில் முதன்மைத் தொழில் என்பதை நன்கு அறிந்து மகத்தான திட்டத்தை செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் சார்பாக மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனதெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img