தர்மபுரியில் வேளாண்மை விற்பனை மற்றும் வணிக துறை சார்பில் வேளாண் விளை பொருட்களுக்கான அக் மார்க் தரம் பிரிப்பு செய்தல் மற்றும் பகுப்பாய்வு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தர்மபுரி வேளாண் மற்றும் வணிகத்துறை சார்பில் 28.11.2024 அன்று அக்மார்க் தரப்பிரிப்பு செய் தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.
இதற்கு தர்மபுரி மாவட்ட வேளாண் வணிகத் துணை இயக்குனர் வி.இளங்கோவன் தலைமை வகித்து வணிகத்துறையின் செயல்பாடுகள், திட்டங்கள், தரம் பிரிப்பு, அக்மார்க் சான்று பெறுவது போன்றவற்றின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.
சென்னை சந்தைப்படுத்துதல் ஆய்வுத்துறை வேதியலாளர் ராமகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அக்மார்க் குறியீட்டின் முக்கியத்துவம் குறித்தும் வேளாண்மை விளை பொருட்களை தரம் பிரித்தலும் பகுப்பாய்வு செய்வதனால் ஏற்படும் முக்கியத்துவத்தினை வேளாண் பெருமக்களுக்கு எடுத்துரைத்தார்.
மேலும் தர்மபுரி மாநில அக்மார்க் ஆய்வுக்கூடத் தின் வேளாண்மை அலுவலர் ஆ.சத்ய நாரா யணன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். பயிற்சி முடிந்தவுடன் பங்கேற்ற விவசாயிகளுக்கு சான்றிதழ் அளிக்கப்பட்டது.