தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக, மாநில தலைமை நிர்வா கிகள் முதல்வரை நேரில் சந்தித்து, நிலுவையின்றி அகவிலைப்படி உயர்வு வழங்கியமைக்கு நன்றி தெரிவித்தனர்.
கூட்டமைப்பு நிர்வாகிகள் த.அமிர்தகுமார், முனை வர் செ.பீட்டர் அந்தோணிசாமி, மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள், வி.ராதாகிருஷ்ணன், மாநில இணை ஒருங்கிணைப்பாளர், இரா.சீத்தாராமன், மாநில ஒருங்கிணைப்பாளர் அளித்த மனுவின் கோரிக்கைகள்:
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை இரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்திட வேண்டும், ஈட்டிய விடுப்பினை சரண்டர் செய்து பணப்பயன் பெறும் சலுகையை வழங்க வேண்டும், 21 மாத ஊதியக்குழு நிலுவை தொகையை வழங்க வேண்டும்
காலி பணியிடங்களை நிரப்புவதோடு, வெளிமுகமை (Outsourcing) மூலம் நிரப்புவதை முழுமையாக கைவிட கோருதல், சத்துணவு, அங்கன்வாடி, ஊர்ப்புர நூலகர்கள் எம்.ஆர்.பி. செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், NMR பணியாளர்கள், OHT இயக்குபவர்கள் உள்ளிட்டவர்களை பணி நிரந்தரம் செய்து காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும்
15 ஆண்டுகளுக்கு மேல் உள்ள ஜீப்புகளுக்கு பதில் புதிய ஜீப்புகளை வழங்கக் கோருதல், மாநக ராட்சி, நகராட்சி, பேரூராட்சியில் பணிபுரிகின்ற அலுவ லர்களை, அரசு அலுவலர்களாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.