துபாயில் நடைபெற உள்ள பாரா ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளி மாணவனுக்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பவுண்டேஷன் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
தூத்துக்குடியைச் சேர்ந்த ஆண்டன் டாரியோ சென்னை மேடவாக்கம் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் துபாயில் நடைபெற உள்ள பாரா ஓட்டப்பந்தயத்தில் கிராண்ட் பிரிக்ஸ் போட் டியில் பங்கேற்கிறார். இதற்காக டிஎம்பி பவுண்டேசன் சார்பாக வங்கியின் தலைமை அலுவலகத்தில் நிர்வாக இயக்குநர் சாலீ நாயர் ரூ.2 லட்சத்து 47 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ் மற்றும் மாணவனின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.