திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காந்தி சாலையில் மண்டித்தெரு சந்திப்பு அருகே 3 அடி அகலம் கொண்ட கிணற்றில் அதிகாலையில் தவறி விழுந்து விட்டதாகவும், கூக்குரல் சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவரை தேடிய போது வீட்டு தோட்டத்தில் இருந்து குரல் வருவதாக தேடி பார்த்தபோது மூதாட்டி பாரதி 52 கிணற்றில் தவறி விழுந்ததை கண்டு அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று கயிறு மூலம் பாரதியை உயிருடன் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும் சம்பவம் குறித்து தவறி விழுந்தாரா? அல்லது குடும்ப சண்டையா? மனநலம் சற்று பாதிப்பு ஏற்பட்டவரா என்பது குறித்து செய்யாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.