fbpx
Homeபிற செய்திகள்கேஎம்சிஹெச் மருத்துவமனை சார்பில் உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக முதலுதவி பயிற்சி முகாம்

கேஎம்சிஹெச் மருத்துவமனை சார்பில் உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக முதலுதவி பயிற்சி முகாம்

செப்டம்பர் 14ம் தேதி உலக முதலுதவி தினம், செப்டம்பர் 29ம் தேதி உலக இருதய தினம் ஆகிவற்றை முன்னிட்டு கேஎம்சிஹெச் மருத்துவமனை பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக முதலுதவி பயிற்சி முகாம் நடத்தியது. இது கோவை ரேஸ்கோர்சில் கடந்த 8ம் தேதி காலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெற்றது.

ஒருவருக்கு இருதய செயல்பாடு திடீர்ரென்று நின்றுவிடும்பொழுது அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வதற்கு முன்பாக அவரின் அருகில் இருப்பவர்கள் தகுந்த முதலுதவி அளிப்பதன் மூலம் அவரின் உயிரை காப்பாற்ற முடியும் என்பதை கேஎம்சிஹெச் மருத்துவமனை மருத்துவர்கள் செயல் விளக்கத்துடன் பொதுமக்களுக்கு செய்து காட்டினர்.

இதில் கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி கூறுகையில்,

“ஒருவருக்கு திடீர் இதயத்துடிப்பு முடக்கம் ஏற்பட்டால், அவருடன் இருப்பவர்கள் இந்த சிறிஸி என்ற முதல் உதவி செய்யும்பொழுது அவரின் உயிரை காப்பாற்றுவதற்கு அதிக வாய்ப்பாக அமைகிறது” என்றார்

படிக்க வேண்டும்

spot_img