fbpx
Homeபிற செய்திகள்வேலைவாய்ப்பில் முதலிடம்: தமிழ்நாட்டுக்கே பெருமை!

வேலைவாய்ப்பில் முதலிடம்: தமிழ்நாட்டுக்கே பெருமை!

தொழிற்சாலைகளின் உற்பத்தி திறன், மதிப்பு கூட்டுதல், வேலைவாய்ப்பு, மூலதன உருவாக்கம் போன்றவற்றின் அடிப்படையில், அவற்றின் அமைப்பு மற்றும் வளர்ச்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்த விரிவான தகவல்களை தெரிவிக்கும் நோக்குடன், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஆண்டுதோறும் தொழிற்சாலைகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், 2022-23-ம் நிதியாண்டுக்கான மதிப்பீட்டு அறிக்கையை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் அதிக வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழகம் தான் முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தொழிற்சாலைகளில் தமிழ்நாட்டில் மட்டும் 15.66% தொழிற்சாலைகள் அமைந்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக 12.25 சதவீத தொழிற்சாலைகளுடன் குஜராத் இரண்டாம் இடத்திலும், 10.44 சதவீதத்துடன் மகாராஷ்டிரா மூன்றாவது இடத்திலும், 7.54 சதவீதத்துடன் உத்தரபிரதேசம் நான்காவது இடத்திலும், 6.51 சதவீதத்துடன் ஆந்திரா ஐந்தாம் இடத்திலும் இருக்கிறது.

இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த தொழிற் சாலைகளில் வேலைபார்க்கும் தொழிலாளர்களில் தமிழ்நாட்டில் மட்டும் 15 சதவீதம் பேர் இருக்கிறார்கள்.

இதில் தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருப்பது தமிழ்நாடு அரசின் சாதனை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் மிகுந்த பெருமை தருவதாகும்.

தொடரட்டும் முதலிடச் சாதனைப் பட்டியல்!

படிக்க வேண்டும்

spot_img