தருமபுரி மாவட்டம், காரிமங்கலம், ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயில் வளாகத்தில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் காரிமங்கலம் அனைத்து வணிகர் சங்கம் ஏற்பாட்டின் பேரில் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது .
காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பாக அலுவலர் நந்தகோபால் வரவேற்பு மற்றும் ஒருங்கிணைப்புடன், காரிமங்கலம் அனைத்து வணிகர் சங்க தலைவர் மாது, செயலாளர் சிவக்குமார், பொருளாளர் கணேசன் , மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் மன்சூர் ஆகியோர் முன்னிலையில் தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ்., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
காரிமங்கலம் பேரூராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் உள்ள உணவு சார்ந்த வணிகம் புரியும் அனைத்து வகையான உணவு தயாரிப்பாளர்கள், பல்பொருள் அங்காடிகள், பேக்கரிகள், உணவகங்கள், மளிகை கடைகள், தேநீர், பெட்டி கடைகள் மற்றும் குளிர்பான, குடிநீர் விற்பனை நிலையங்கள், விநியோகிப்பாளர்கள் பால் மற்றும் பால் சார்ந்த பொருள் விற்பனையாளர்கள், விநியோகிப்பாளர்கள் நடமாடும் உணவு வணிகர்கள், பாஸ்ட் புட், துரித உணவு கடைகள், பானிபூரி, காய்கறி, பழங்கள் விற்பனையாளர்கள் மற்றும் நடைபாதை உணவு வணிகர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெறுவதற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் விண்ணப்ப படிவங்களை வழங்கினர்.
இவை ஏழு தினங்களுக்குள் உரிய வகையில் பதிவேற்றம் செய்து முறையான ஆய்வுக்கு பின் உரிமம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். தாங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட இணையதள முகவரிக்கும் அப்போதே சென்றடையும்.
இதுவரை உணவு பாதுகாப்பு உரிமம் பெறாதவர்கள், வர இயலாதவர்கள் தாங்களாகவே லீttஜீs:/யீஷீsநீஷீs.யீssணீவீ.ரீஷீஸ்.வீஸீ உரிய விவரங்களை பதிவேற்றி பின்பு ஆன்லைன் வழியாக தொகை செலுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு உரிமம் , பதிவு பெறாத உணவு வணிகர்களுக்கு விரைவில் அபராதம் மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட நியமன அலுவலர் தெரிவித்தார்.