8வது கோவை சஹோதயா பள்ளிகள் குழு சார்பில் 2024 – 25ம் ஆண்டுக்கான 8 வது, மாணவர்களுக்கான (ஆண்கள்) 7-ஏ பகுதி கால்பந்து போட்டிகள் கடந்த செப்டம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் கணபதியில் உள்ள கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது. பள்ளிகளுக்கு இடையிலான இந்த கால்பந்து போட்டியில் 31 அணிகளில் மொத்தம் 348 மாணவர்கள் பங்கேற்று விளையாடினர்.
19 வயதிற்குட்பட்ட பிரிவு கால்பந்து போட்டியில் பிஏ இன்டர்நேஷனல் பள்ளி முதலிடத்தையும் கேம்போர்டு இன்டர்நேஷனல்பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்று அசத்தினர். 17 வயதிற்குட்பட்ட பிரிவில் யுவபாரதி பப்ளிக் பள்ளி முதல் இடத்தையும் கேம்போர்டு இன்டர்நேஷனல்பள்ளி இரண்டாம் இடத்தையும் பிடித்தன.
அதேபோல 14 வயதிற்குட்பட்ட பிரிவில் முதலிடத்தை யுவபாரதி பப்ளிக் பள்ளி பெற்றது. இரண்டாது இடம் கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளிக்கு கிடைத்தது.
போட்டியில் வென்ற மாணவர்களை கேம்போர்டு இன்டர்நேஷனல்பள்ளித் தலைவர் என்.அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ் மற்றும் முதல்வர் டாக்டர் பூனம் சைல் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.