fbpx
Homeபிற செய்திகள்மேட்டுப்பாளையம் அருகே சிறுத்தை நடமாட்டம் - வனத்துறையினர் கண்காணிப்பு

மேட்டுப்பாளையம் அருகே சிறுத்தை நடமாட்டம் – வனத்துறையினர் கண்காணிப்பு

மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனச்சர கப்பகுதிகளில் ஏராளமான காட்டு யானை, மான், காட்டு மாடு, சிறுத்தை, புலி உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் உள் ளன. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரைத்தேடி அவ்வப்போது விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையம்-வெள்ளிப்பாளையம் சாலையில் உள்ள கருப்பராயன் கோவில் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன் வனத்துறையினருக்கு தகவல் வந்தது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனச்சரக அலுவலர் மனோஜ் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் தன்னார்வ அமைப்பான என்டபுள்யு சிடி குழுவினர் இணைந்து அப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அங்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பது அங்குள்ள விவசாய தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் கூறுகையில், “சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ள வெள்ளிப்பாளையம் சாலை கருப்பராயன் கோவில் அருகே 2கேமராக்கள் பொருத்தப்பட்டு சிறுத்தையின் நடமாட்டம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் அப்பகுதியில் சிறுத்தையை பார்த்ததாக பொது மக்கள் தெரிவித்தனர்.

இது குறித்து உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் ” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img