பார்ச்சுனா குளோபல் சார்பில் ஆரோக்கியம், உடல் நலம், வர்த்தக செயல்பாட்டுத் திறன் ஆகிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் 2024-ம் ஆண்டுக்கான சிறந்த முதன்மை செயல் அதிகாரி விருது தேர்வுக் குழுவினர் 3,50,000 சுயவிவர ஆவணங்களைப் பரிசீலித்து, 18000 நேர் முகங்கள் நடத்தி, 81 நாடுகளில் இருந்து 4000 விண்ணப்பங்களைப் பரிசீலித்து அவற்றில் இருந்து 47 நாடுகளில் இருந்து விருது பெறத் தகுதியான 94 நபர்களைத் தேர்வு செய்துள்ளனர்.
மருத்துவத் துறையில் குறிப்பிட்ட பிரிவில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே நபர் டாக்டர் சிவகுமாரன் என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாதம் 7-ம் தேதி துபாயில் குயின் எலிசபத் 2 என்ற கடலில் மிதக்கும் சொகுசுக் கப்பலில் நடைபெற்ற விழாவில் 2024-ம் ஆண்டுக்கான சிறந்த முதன்மை செயல் அதிகாரி விருது டாக்டர் சிவகுமாரனுக்கு வழங்கப்பட்டது.
டாக்டர் சிவகுமாரனுக்கு சிறந்த முதன்மை செயல் அதிகாரி விருது கிடைத்துள்ளதை மிகவும் பெருமைக் குரியதாகக் கருதுகிறோம் என கேஎம்சிஹெச் தலைவர் டாக்டர் நல்லா ஜி.பழனிசாமி தனது பாராட்டுரையில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமியும் தனது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.