டாபர் தென்னிந்தியாவில் மாபெரும் பல் சுத்த பராமரிப்பு இயக்கத்தை முன்னெடுத்துள்ளது. இது இந்திய பல் மருத்துவ சங்கத்துடன் இணைந்து பல் மருத்துவ முகாம்களைத் தொடங்கியுள்ளது.
தென்னிந்தியா, டாபரின் முக்கியமான சந்தை ஆகும். டாபர் சிவப்பு பற்பசை, தமிழ்நாட்டிலும் ஆந்திரப் பிரதேசத்திலும் பல் பராமரிப்பு சந்தையில் முதலிடம் வகிக்கிறது. அதேபோல கர்நாடகத்திலும், தெலங்கானாவிலும் வலுவான இடத்தைப் பிடித்திருக்கிறது.
இந்நிலையில் இந்திய பல் மருத்துவ சங்கத்துடன் இணைந்து உள்ளூர் பல் மருத்துவர்களுடன் கைகோர்த்து வாய் சுகாதாரப் பிரச்சனைகளுக்கு எவ்வாறு ஆயுர்வேதம் மூலம் தீர்வு காணலாம் என்பதை எடுத்துக்காட்ட டாபர் தொடர்ந்து முனைகிறது.
மேலும் இவர்கள் இணைந்து இப்பகுதி முழுவதும் இலவச பல் மருத்துவ முகாம்களை நடத்துவதுடன் ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து அங்கு பல் பராமரிப்பு குறித்த வழிகாட்டுதலையும் வழங்குகின்றனர்.
இது குறித்து டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் பினித் குமார் பேசுகையில், டாபரை சிறந்த ஆயுர்வேத பற்பசையாக இந்திய பல் மருத்துவ சங்கம் அங்கீகரித்தது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த அங்கீகாரம், எங்களது வாடிக்கையாளர்கள் எங்கள் தயாரிப்புகளின்மீது கொண்டுள்ள நம்பிக்கை, அன்பின் பிரதிபலிப்பு ஆகும்“ என்றார்.