fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு மாவட்டத்தில் 198 மையங்களில் இலவச புற்றுநோய் பரிசோதனை

ஈரோடு மாவட்டத்தில் 198 மையங்களில் இலவச புற்றுநோய் பரிசோதனை

தமிழக சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, ஈரோடு மாவட்டம் உட்பட நான்கு மாவட்டங்களில் சமூகப் புற்றுநோய் பரிசோதனைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதுதொடர்பாக ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுங்கரா கூறியதாவது:

வாய்ப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஆகிய மூன்று வகையான புற்றுநோய்களை முன்கூட்டியே கண்டறிவது, அதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இறப்புகளைக் குறைத்து, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாய் புற்றுநோய் பரிசோதனை, மார்பக புற்றுநோய் பரிசோதனை மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை
30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு
நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் 73 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 18 நகர்ப்புற சுகாதார நிலையங்கள், 98 ஊரக துணை சுகாதார நிலையங்கள், 8 அரசு மருத்துவமனைகள், ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மையம் உட்பட 198 சமூக அளவிலான புற்றுநோய் பரிசோதனை மையங்களில் அரசால் இலவச புற்றுநோய் பரிசோதனை நடத்தப்படுகிறது.

மகளிர் சுகாதார தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வீடுகளுக்குச் சென்று அனைவரையும் முகாமில் கலந்து கொள்ளச் செய்கிறார்கள். பரிசோதனை செய்தவர்களுக்கு அறிகுறிகள் தென்பட்டால், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

இத்திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் வாய் புற்றுநோய் பரிசோதனைக்கு 4,23,478 பேரும், மார்பக புற்றுநோய் பரிசோதனைக்கு 2,21,765 பேரும், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனைக்கு 2,21,816 பேரும் அழைக்கப்பட்டனர். இதில், 2,08,699 பேரில் 22 பேருக்கு வாய் புற்றுநோய், 86,063 பேரில் 22 பேருக்கு மார்பகப் புற்றுநோய், 62880 பேரில் 9 பேருக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் கண்டறியப்பட்டது.
புகையிலை பழக்கம், பிளாஸ்டிக்கில் பயன்பாடு பொரித்த சூடான உணவுகள், மீண்டும் மீண்டும் பயன்படுத்திய எண்ணெயில் பொரித்த உணவுகள், இரசாயன பயன்பாடு, மைக்ரோவேவ் கதிர்வீச்சின் வெளிப்பாடு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவற்றால் புற்றுநோய் ஆபத்து அதிகரிக்கிறது. இதைத் தடுக்க, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் மருத்துவப் பரிசோதனை செய்து, மன அழுத்தமில்லாத வாழ்க்கை முறை, முறையான உணவு முறை, யோகா போன்றவற்றைப் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img