fbpx
Homeபிற செய்திகள்உலக பார்வை தினத்தை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச கண் பரிசோதனை

உலக பார்வை தினத்தை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச கண் பரிசோதனை

உலக பார்வை தினத்தை முன்னிட்டு டாக்டர். அகர்வால்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆப்டோமெட்ரி, சென்னையில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக இயங்கி வரும் 12 இல்லங்களில் 400க்கும் அதிகமான குழந்தைகளுக்கு கண் பரிசோதனைகளை இலவசமாக மேற் கொண்டது. மேலும் தேவை இருப்பவர்களுக்கு கண் கண்ணாடிகளையும் தானமாக வழங்கியது.

இதற்கும் கூடுதலாக, அக்டோபர் 31ம் தேதி வரை இம்மாநகரில் உள்ள அதன் அனைத்து கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு விரிவான கண் பரிசோதனைகளை கட்டணமின்றி இலவச மாக மேற்கொள்கிறது.

இந்நிகழ்வுகள், இந்திய பார்வை அளவையியல் கூட்டமைப்பு (OCI), ஜெய்ஸ், ஹோயா விஷன் கேர் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை மித்ரா ஆகியவற்றின் ஆதரவோடு நடத்தப்படுகிறது.

இது குறித்து டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்து வமனையின் மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவர் டாக்டர். எஸ். சௌந்தரி கூறுகையில்,
“சிறார்களது பார்வைத்திறன் மீது உலகப்பார்வை தின நிகழ்வுகள் சிறப்பு கவனம் செலுத்துகின்றது” என்றார்.

பின்னர் டாக்டர். அகர்வால்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆப்டோமெட்ரியின் டீன் டாக்டர். கற்பகம் தாமோதரன், குழந்தைகளுக்கான முதுநிலை கண் மருத்துவர் மஞ்சுளா ஜெயக்குமார் ஆகியோர் கண் பராமரிப்பிற்கான முன்தடுப்பு நடவடிக்கைகள் பற்றி பேசினர்.

படிக்க வேண்டும்

spot_img