fbpx
Homeபிற செய்திகள்சிதம்பரத்தில் இலவச மருத்துவ முகாம் -ஆதரவற்றோர், முதியவர்களுக்கு உணவு

சிதம்பரத்தில் இலவச மருத்துவ முகாம் -ஆதரவற்றோர், முதியவர்களுக்கு உணவு

சவுதி அரேபிய நாட்டின் அல்-பர்காஷ் நிறுவனத்தின் தலைவர் முகமது பர்காஷின் 3-ம் ஆண்டு நினைவு தினம் சிதம்பரத்தில் அனுசரிக்கப்பட்டது. இதில் சிதம்பரம் தாலுகா கே.ஆடூர் கிராமத்தைச் சேர்ந்தவரும், அல்-பர்காஷ் நிறுவனத்தின் பொது மேலாளரான ஏ.எஸ். சபாநாயகம் தலைமை தாங்கினார். நிறுவனத்தின் மேலா னர் அரிகிருஷ்ணன் வரவேற்றார். இதில் நிறுவனத்தின் ஊழியர்கள் கலந்து கொண்டு முகமது பர்தாஷனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து இலவச கண்சிகிச்சை மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சிதம்பரம் காமராஜர் மருத்துவமனை ரத்த வங்கிக்கு ரத்ததானம் வழங்கினார்கள்.மேலும் அரசு மருத்துவமனைக்கு தேவையான இருக்கைகள் போன்ற உபகரணங்களை பொதுமேலாளர் ஏ.எஸ்.சபாநாயகம் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் லட்சுமி தலைமையிலான குழுவினரிடம் வழங்கினார்.
பின்னர் சிதம்பரத்தில் உள்ள ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சென்னை ராதா என்ஜினீயரிங் நிறுவ னத்தின் நிர்வாக இயக்குநர் செந்தில்குமார், அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல் வாழ் உயிரின முன்னாள் புல முதல்வர் பாலசுப்பிரமணியம், சிதம்பரம் கே.ஆர்.மருத் துவமனை டாக்டர் ஏ.எஸ். வேல்முருகன்,தி.மு.க.தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், நகரமன்ற உறுப்பினர் அப்பு. சந்திரசேகர், சிதம்பரம் நாட்டியாஞ்சலி கமிட்டி உறுப்பினர் ஆர்.ஆர்.சபாநாயகம், நகரமன்ற முன்னாள் தலைவர் தோப்பு சுந்தர், கீரப்பாளையம் ஒன்றிய குழுதலைவர் தேவதாஸ் படையாண்டவர்,சிதம்பரம் நடராஜா ஜீவல்லரி உரிமையாளர் ராமநாதன். கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் திட்ட உதவி இயக்குனர் விஜயகுமார், குமாரவேலு, மணிகண்டன், தங்கராசு, கனகசபை ஹரிகரன், விஜயகிரி, செல்வம்,பழனி வேலாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் அண்ணாமலை பல்கலைக்கழக அவசர சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவர் டாக்டர் கிஷோர் குமார் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img