fbpx
Homeபிற செய்திகள்அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் காந்தி ஜெயந்தி விழா

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் காந்தி ஜெயந்தி விழா

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் காந்தி ஜெயந்தி விழா நடைபெற்றது.

இதில் பொருளாதார துறை தலைவர் முனைவர் காந்திமதி வரவேற்புரை நல்கினார்.

அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் மேனாள் பதிவாளர் மற்றும் இணை நிர்வாக அறங்காவலர் முனைவர் கௌரி ராமகிருஷ்ணன் தலைமை உரையில் “அவினாசிலிங்கம் அய்யா அவர்கள் காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி வாழ்ந்தவர் என்றும் இதன் அடிப்படையில் அனைத்து மக்களும் சாதி, மத வேறுபாடின்றி கல்வி பெறுவதற்காக வித்யாலயத்தையும் பெண்களின் முன்னேற்றமே நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் என்பதால் அய்யா அவர்கள் அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தையும் உருவாக்கினார் என்றும் காந்தியடிகளின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகின்ற விழாவில் கதர் ஆடை அணிந்து கொண்டாடுவதில் பெருமை யடைகிறோம் என்றும் கூறினார்.

அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் காந்தி ஜெயந்தி விழாவினை முன்னிட்டு காந்தியடிகளின் வாழ்க்கையைப்பற்றி உரையினை நிகழ்த் தினர்.

சிறப்புக்கல்வி மற்றும் கணிதத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் வி. மிருனாலினி சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தும் விதமாக அவரது பெருமைகளையும் முன்னிலைப்படுத்தி அறிமுகவுரையாற்றினார்.

படிக்க வேண்டும்

spot_img