காதலர் தினம் என்றாலே காதலர்கள் இடையே ஒரு மகிழ்ச்சியும் குதூகலமும் ஏற்பட்டு விடும். அவர்களுக்கு இடையே அன்பைப் பரி மாறிக் கொள்ள பல்வேறு பரிசுப் பொருட்களை வழங்குவர். அதே போல் சாக்லேட் உள்ளிட்ட இனிப்புகளை பரிமாறிக் கொள்வார்கள்.
இந்த காதலர் தினத்தில் சற்று மாறுதலாக உட லுக்கு ஆரோக்கியம் தரும் பாதாமை காதலர் தின பரிசாக வழங்கி உங்கள் நல்வாழ்விற்கு முன்னு ரிமை கொடுங்கள். உங்கள் அன்பிற்குரியவரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுபவ ராக நீங்கள் இருந் தால் அதற்கான சிறந்த சில பரிசுகளில் பாதாமும் ஒன்றாகும்.
பாதாம், அதன் மொறுமொறுப்பான சுவை மற்றும் எண் ணற்ற ஆரோக்கிய நன்மைகளுக்காக அனைவராலும் நன்கு அறியப்பட்டதாகும். இது உடலுக்கு ஊட்டமளிக்கும் சிறந்த உணவாகும்.
இதில் ஜிங்க், இரும்பு, வைட்டமின் ஈ, மெக்னீசியம் மற்றும் புரதம் உள் ளிட்ட 15 ஊட்டச்சத்துகள் உள்ளது. இத்தனைச் சத்துக்களைக் கொண்ட பாதாம் நமது உடல் ஆரோக் கியத்தில் முக்கிய பங்களிக்கிறது. அவை இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
மேலும் உடல் எடை பராம ரிப்பு மற்றும் ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை நிர்வகிக்கவும் உதவு கின்றன. உங்கள் உணவில் பாதாமை சேர்த்துக்கொள்வதன் மூலம், உங்கள் நல்வாழ்விற்கான பல்வேறு அம்சங்களை நீங்கள் பெறலாம்.
இப்படி இந்த காதலர் தினத்தில் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிகுந்த பாதாமை பரிசளியுங்கள் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.