fbpx
Homeபிற செய்திகள்திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம்: முதல்வருக்கு நாமக்கல் மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி

திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம்: முதல்வருக்கு நாமக்கல் மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி

திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் பெற்ற பயனாளி சீ.அம்சா தெரிவித்ததாவது:

கொல்லிமலை வளப்பூர் நாடு அருகில் வசித்து வருகிறேன். 12 ஆம் வகுப்பு படித்துள்ளேன். தாலிக்கு தங்கம் வேண்டி விண்ணப்பித்திருந்தேன். ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு விதவை மகள் உதவித்திட்டத்தின் கீழ் எனக்கு 1 பவுன் தங்க நாணயம், ரூ.25,000- வழங்கியுள்ளனர். என்னை போன்ற ஏழை எளியோர்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் உதவித்தொகை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது சார்பாகவும் எனது குடும்பத்தின் சார்பாகவும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் பெற்ற பயனாளி க.சங்கீதா தெரிவித்ததாவது :
எனது கணவர் பெயர் ராம்குமார், பழையபாளையம் கிராமத்தில் வசித்து வருகிறோம். நான் 12 வகுப்பு படித்துள்ளேன். திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் விண்ணப்பித்திருந்தோம். தற்போது, எனக்கு 1/4 பவுன் நகை மற்றும் ரூ.25,000/- தற்போது வழங்கியுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்களுக்கென பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள். பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண் திட்டம் என பெண்களுக்கு நிறைய திட்டங்களை நமது முதலைமைச்சர் அவர்கள் கொண்டு வந்துள்ளார்கள். திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் பெற்ற இன்னொரு பயனாளி ஜெ.கீருத்திகா தெரிவித்ததாவது:
எனது கணவர் பெயர் பிரசாந்த். இராசிபுரத்தில் சின்ன செக்கடி கிராமத்தில் வசித்து வருகிறோம். நான் திருமணமானவுடன் தாலிக்கு தங்கம் பெறுவத்றகாக விண்ணப்பித்திருந்தேன். நேற்று தான் எனக்கு தாலிக்கு தங்கம், திருமண உதவித் தொகை வழங்குவதாக தெரிவித்தார்கள். அப்போது மகிழ்ச்சியடைந்து எனது கணவரிடமும், அருகில் வீட்டில் உள்ளவர்களிடமும் தெரிவித்தேன். என்னை போன்ற ஏழை பெணகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கிய முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
தொகுப்பு:

தே.ராம்குமார்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
த.வடிவேல்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர், (செய்தி)
நாமக்கல் மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img