fbpx
Homeதலையங்கம்ஆளுநர் மாளிகை பொய்கள் அம்பலம்!

ஆளுநர் மாளிகை பொய்கள் அம்பலம்!

ஆளுநர் மாளிகை முன்பு கருக்கா வினோத் என்பவர் பெட்ரோல் குண்டு வீசினார். ஆளுநர் மாளிகை முன்பு நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திலேயே கருக்கா வினோத்தை காவல்துறையினர் கைது செய்தனர்.

பெட்ரோல் பாட்டில் வீசப்பட்ட சம்பவத்திற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர். ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து , எக்ஸ் சமூக வலை தள பக்கத்தில், ஆளுநர் மாளிகை நோக்கி பெட் ரோல் குண்டு வீசபட்டுள்ளது. குற்றவாளிகள் தப்பிவிட்டனர் என்பது போல பதிவிட்டு இருந்த னர். இந்த சம்பவம் தொடர்பாக ஆளுநர் மாளிகை அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்த னர். பெட்ரோல் பாட்டில் வீச்சு தொடர்பாக நேற்று தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து சிசிடிவி காட்சிகளை காண்பித்து விளக்கம் அளித்தனர்.
அதில் முதலில், குற்றவாளி கருக்கா வினோத் நந்தனம் கலை கல்லூரி வழியாக கையில் ஒரு பையுடன் நடந்து செல்வது காண்பிக்கப்பட்டது.

அதன் பிறகு, மற்ற சிசிடிவி கேமிராக்கள் மூலம், சைதாப்பேட்டை பாலம் வழியாக நடந்து வருவது கான்பிக்கப்பட்டு , உடன் யாரும் இல்லை தனியாக தான் கருக்கா வினோத் ஒரு பையுடன் வருகிறார் என காவல்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்த னர்.  பின்னர் சர்தார் படேல் சாலையில், ஆளுநர் மாளிகை எதிர்புறம் உள்ள ரோட்டின் அந்த பக்கம் கருக்கா வினோத் நின்று கொண்டு பெட்ரோல் பாட்டில்களை சாலையின் அந்த பக்கம் வீசியுள்ளார். இது பேரிகார்டு (தடுப்பு பலகை) பக்கம் விழுந்துள்ளது. ஆளுநர் மாளிகை நோக்கி கருக்கா வினோத் பெட்ரோல் பாட்டில் வீசவில்லை. மேலும் கருக்கா வினோத் எங்கும் ஓடவில்லை. அங்கேயே தான் நிற்கிறார்.

பிறகு ஆளுநர் மாளிகை ஊழியர்கள் யாரும் பிடிக்கவில்லை. 5 சென்னை மாநகர காவல்துறையினர் தான் கருக்கா வினோத்தை பிடித்துள்ளனர். அவரிடம் இருந்து 2 பெட்ரோல் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கருக்கா வினோத் ஆளுநர் மாளிகை உள்ளே நுழைய முற்படவில்லை எனவும் தெளிவுப்படுத்தினர்.
ஆக, ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் அளித்த புகாரில் அளிக்கப்பட்ட தகவல்கள் உண்மைக்கு மாறாக உள்ளது என்பது உறுதியாகி உள்ளது. ஆளுநரின் குற்றச்சாட்டு பொய்யானது என்று தமிழ்நாட்டின் காவல்துறை நிரூபித்துள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் மீது வேண்டுமென்றே பொய் குற்றச்சாட்டு களை முன்வைக்கிறார் என்று தொடர்ந்து ஆளுநர் மீது அரசியல் கட்சிகளால் குற்றம்சுமத்தப்பட்டு வருகிறது. அது நியாயம் தான் என்பதற்கு பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தில் ஆளுநர் தரப்பு நடந்து கொண்ட விதமே சாட்சியாகி விட்டது.
இது தான் குண்டு வெடிப்பா? இதற்கு இத்தனை அவதூறுகளா? இத்தனை வீடியோ ஆதாரம் இருந்தும் பொய்யாக பரப்புரை செய்வது ஆளுனருக்கு அழகா? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.
உயரிய பதவியில் இருக்கும் ஆளுநரின் குற்றச் சாட்டு பொய் என்று நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு!

படிக்க வேண்டும்

spot_img