fbpx
Homeபிற செய்திகள்கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியாளர்களுக்கு பட்டமளிப்பு விழா

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியாளர்களுக்கு பட்டமளிப்பு விழா

திருவண்ணாமலை மாவட்ட மண்டல இணைப்பதிவாளர் பார்த்திபன் தலைமையில் ஆண்டு முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியாளர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பார்த்திபன் தலைமை உரையாற்றி சான்றிதழ்களை வழங்கினார். திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் ஜெயம் முன்னிலை வகித்தார்.

துணைப்பதிவாளர் பணியாளர் அலுவலர் ராஜசேகரன், துணைப்பதிவாளர் பொதுவிநியோக திட்டம் துரைராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சிக்கு முன்னதாக கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய முதல்வர் ஆரோக்கியராஜ் அனைவரையும் வரவேற்றார். முடிவில் திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குனர் பா. சிவக்குமார் நன்றியுரை ஆற்றினார்.

படிக்க வேண்டும்

spot_img