தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட காமராஜ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகளுடன் இணைந்து நடத்திய மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாமில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா, 64மாணவ, மாணவியர்களுக்கு ரூ.2.89 கோடி கல்விக்கடன் ஆணைகளை வழங்கினார். உடன் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அஸ்வர்ணலதா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாரத ஸ்டேட் வங்கி துரைராஜ், காமராஜ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பூங்கொடி ஆகியோர் உள்ளனர்.