பொதுத்துறை நிறுவனங்களுக்கும், வர்த்தகத்துறை வாடிக்கையாளர்களுக்கும் ஆலோசனை மற்றும் நிர்வகிக்கப்படும் சேவைகளை வழங்குவதில், உலகளவில் முன்னணி நிறுவனமான செயலாற்றிவரும் கைடுஹவுஸ், தமிழ்நாட்டின் சென்னை மாநகரில் அதன் செயல்நடவடிக்கை தொடங்குவதாக அறிவித்துள்ளது.
சென்னையில் இராமானுஜன் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கேம்ப்ரிட்ஜ் டவரின் 2-வது தளத்தில், புதிய அலுவலகத்தை கைடு ஹவுஸ் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி சார்ல்ஸ் பியர்டு, கைடுஹவுஸ் இந்தியாவின் தேசிய தலைமை அலுவலர் மஹேந்திர சிங் ராவத் ஆகியோர் திறந்து வைத்தனர்.
2023-ம் ஆண்டின் இறுதிக்குள் சென்னை அலுவலகத்தில் 2000 முழுநேர பணியாளர்களை பணிக்கு சேர்க்கும் திட்டத்தோடு இந்நிறுவன பணியாளர் குழுவில்இணைய திறனும், அனுபவமும் மிக்க பணியாளர்களை கைடுஹவுஸ் தேர்வு செய்ய இருக்கிறது.
கரியர் வாய்ப்பு
“புதிய தளங்களிலும், பிரிவுகளிலும் எமது திறன்களையும், டிஜிட்டல் நிபுணத்துவத்தையும் விரிவாக்கம் செய்கிறபோது, உள்நாட்டைச் சேர்ந்த பணியாளர்களுக்கு மிகச்சிறந்த கரியர் வாய்ப்புகளை வழங்குவது மீதும் மற்றும் இந்தியாவெங்கிலும் எமது செயலிருப்பை மேலும் பரவலாக்கி வளர்ப்பது மீதும் நாங்கள் தொடர்ந்து பொறுப்புறுதி கொண்டிருக்கிறோம்” என்று இந்நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி சார்ல்ஸ் பியர்டு குறிப்பிட்டார்.
விழாவில் ஆனந்த் பரத்வாஜ் (செயலாக்க இயக்குநர், ஹெல்த்கேர் மேனேஜ்டு சர்வீசஸ்), சாஜி சக்கரியா (இயக்குநர், மனிதவளம்) மற்றும் ராணா தங்கப்பன் (இணை இயக்குநர், ஃபெசி லிட்டிஸ் மற்றும் நிர்வாகம்) ஆகியோரும் மற்றும் கைடுஹவுஸ் இந்தியாவின் பிற முக்கிய உயரதிகாரிகளும் கலந் கொண்டனர்.
வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறைக்கு சமஅளவில் சேவை யாற்றிவரும் உலகளாவிய மாபெரும் ஆலோசனை சேவை நிறுவனமாக (கன்சல்ட்டிங்) இயங்கிவரும் கைடு ஹவுஸ், அதன் வாடிக்கையாளர் ஒவ்வொருநாளும் சந்திக்கும் கடுமையான பிரச்சினைக்கு தீர்வுகாண உதவுவதில் சிறப்பு நிபுணத்துவம் கொண்டிருக்கிறது.
உலகளவில் 55-க்கும் அதிகமான அமைவிடங்களில் செயலாற்றிவரும் இந்நிறுவனம் 20 ஆண்டுகளுக்கும் கூடுதலான அனுபவத்தை கொண்டிருக்கிறது.
கைடுஹவுஸ் இந்தியா நிறுவனமானது, கைடுஹவுஸ் இங்க் என்ற தாய் நிறுவ னத்திற்கு 100% சொந்தமான ஒரு துணை நிறுவனமாகும்.
திருவனந்தபுரம், சென்னை, நாகர் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள நவீன அலுவலகங்களில் 5,000-க்கும் அதிகமான நபர்களை இந்நிறுவனம் பணியாளர் களாக கொண்டுள்ளது.